Food, Health

உங்க இதயத்துடிப்பு உங்களுக்கே கேக்குதா ?

ராத்திரி நேரம்… படுக்கைல படுத்திருக்கும் போது, உங்க இதயம் லப்டப் – லப்டப்’னு துடிக்கிற சத்தத்தை கேட்டு இருக்கீங்களா…?

கண்டிப்பா ஒரு நாளாவது கேட்டு இருப்பீங்க. அப்போ, ஹய்யா, நம்ம ஹார்ட் பீட் நமக்கே கேக்குதே’னு, ஒரு பூரிப்பு  உங்களுக்கு இருந்திருக்கும். இல்லனா, அந்த லப்டப் சவுண்ட்ல நம்ம ஆள் பேரு கேக்குதான்னு ஆராய்ச்சி பண்ணிருப்பீங்க.

By the way, இது ஒன்னும் ஜாலியான விஷயம் இல்லிங்க. கொஞ்சம் மோசமான ஒரு குறைபாட்டோட அறிகுறி.

ஆமாம் நண்பா, இது பொட்டாசியம் குறைபாட்டோட அறிகுறி. ஒரு ஆரோக்கியமான மனிதனுக்கு, தன்னோட இதயத்துடிப்பு கேட்கவே கூடாதாம்.

அப்படி கேட்டுச்சுனா, அது பொட்டாசியம் சத்து உங்க உடம்புல கம்மியா இருக்குன்னு, உங்க உடம்பு உங்களுக்கு உணர்த்துற அறிகுறியாம்.

என்னது பொட்டாசியம் குறைபாடா… அதுக்கும் நம்ம உடம்புக்கும் என்ன சம்பந்தம்’னு கேட்குறீங்களா ? சொல்றேன்.

பொட்டாசியம் தரும் நன்மைகள்

பொட்டாசியம், இயற்கையாவே நம்ம உடம்பை சாந்தப்படுத்துற தன்மை உடையது. இதை தான் English’ல Physiological Tranquilizer’னு சொல்வாங்க.

நம்ம தசைகளோட இயக்கம், நரம்புகளோட செயல்பாடு, உடல் திரவங்களோட சமன்பாடு எல்லாத்தையும் சீராக வைக்க, நம்ம உடம்புக்கு பொட்டாசியம் சத்து தேவைப்படுது.

பொட்டாசியம் சத்து அதிகமாக இருக்கிற உணவுகளை சாப்பிடுறதால ரத்த அழுத்தம் குறையுது, பக்கவாதம், சிறுநீரக கற்கள் ஏற்படுவதும் தடுக்கப்படுது.

உடம்புல நீர் கோர்த்துக்குற பிரச்சனையும் தீரும். இந்த பொட்டாசியம், எலும்புகள் ஓட்டையாகி போற Osteoporosis அப்படிங்கிற எலும்புக் கோரை நோயும் வராம பாதுகாக்கும்.

 
 
 

பொட்டாசியம் குறைபாடு ஏற்பட என்ன காரணம்

சர்க்கரை உள்ள உணவுகளை அதிக அளவு சாப்பிடுவது, அதிக Stress (மன அழுத்தம்), ரத்தத்தில் அதிக அளவு இன்சுலின் இருப்பது, பொட்டாசியம் சத்துக்கள் இருக்க உணவுகளை சாப்பிடாம இருக்குறது. இதெல்லாம்தான், பொட்டாசியம் சத்து குறைபாடு ஏற்பட முக்கியமான காரணங்கள்.

சர்க்கரை மற்றும்  குளுக்கோஸ்

நாம Refined Grainsனு சொல்ற  சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை சேர்த்து செய்யற எந்த ஒரு உணவுப் பொருளா இருந்தாலும், அதுல சர்க்கரை மற்றும் குளுக்கோஸ் அளவுகள் அதிகமா இருக்கும். இது பொட்டாசியம்  குறைபாட்டை ஏற்படுத்தும்.

 உதாரணமாக, இந்த வெல்லம் இருக்குல்ல… அதை நீங்க சாப்பிட்டால் உங்களுக்கு பொட்டாசியம் குறைபாடு வராது. ஏன்னா, அதுல இயற்கையாவே பொட்டாசியம் மட்டுமில்லாம பல மினரல் சத்துகள் இருக்கு.

ஆனா, நம்ம வீட்ல இருக்க வெள்ளை சர்க்கரை இருக்கே, அது வெல்லத்தை சுத்திகரிச்சு தான் சர்க்கரையாக மாற்றப்படுது. ஆனா, சுத்திகரிப்பு செய்யும் போது, அதோட ஒட்டுமொத்த சத்துக்களையும்  இழந்துட்டு, வெறும் சர்க்கரை மட்டும்தான் நமக்கு கிடைக்கும்.

  அதனால, முடிஞ்ச வரைக்கும் நம்ம வெல்லம், பனை வெல்லம், கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரை போன்ற சத்துக்கள் மிகுந்த சர்க்கரைகளை உபயோகிக்க முயற்சி பண்ணுங்க.

 முடியலையா, இனிப்பு துளசியோ(Stevia), அல்லது Artifcial  Sweetenersனு சொல்லப்படுற செயற்கை இனிப்பு சுவையூட்டிகளை  வாங்கி பயன்படுத்துங்க.

 இந்த வெள்ளை சர்க்கரையை சாப்பிட்டால், அது நம்ம உடம்புல இருக்க பொட்டாசியம் சத்துக்களை எல்லாமே உறிஞ்சி வெளியேற்றிவிடும். இதனால தான் பொட்டாசியம் குறைபாடு  ஏற்படுது.

இன்சுலின்

அதிக அளவு மாவுச்சத்து( சர்க்கரை மற்றும் குளுக்கோஸ்)  நிறைந்த உணவுகளை சாப்பிடுறது மட்டுமில்லாம, உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்து, இன்சுலினை எடுத்து வந்தா, இரத்தத்துல இன்சுலின் அளவு அதிகரிக்கும்.

 அப்படி அதிகமானா, இந்த இன்சுலின், உங்க சிறுநீரகம் மூலமா பொட்டாசியம் சத்துக்களை வெளியேத்திடும். இதனால கூட பொட்டாசியம் குறைபாடு ஏற்படும்.

உணவு

நீங்கள் பொட்டாசியம் சத்து உள்ள உணவுகளை தவிர்த்து வந்தா, உங்க உடம்புல பொட்டாசியம் அளவு குறைஞ்சிடும். ஒரு நாளைக்கு 7 முதல் 10 கப்  வரை காய்கறிகள் சாப்பிட்டா தான், நம்ம உடலுக்கு போதுமான பொட்டாசியம் சத்து கிடைக்கும். ( தினசரி  4700  மில்லிகிராம் ).

ஒருவேளை,  உங்களுக்கு முடக்குவாதம் (Rheumatoid Arthiritis)  போன்ற மூட்டு பிரச்சனைகள் இருந்தால், தினமும் 6000 மில்லி கிராம் வரை பொட்டாசியம் தேவைப்படும்.

எனவே, உங்களுக்கு, உங்க லப் டப் சத்தம் கேட்டா,  பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்த கீரை வகைகள், முக்கியமா பீட்ரூட் கீரை, தேங்காய் எண்ணெய், கிவி பழம், காளா மீன் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அல்லது Supplement எனப்படும் துணைச் சத்துக்களாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *