Food, Health

புற்று நோயை எதிர்க்கும் 3 முக்கிய உணவுகள்

Anti-Cancer Foods

புற்று நோய் – உலகத்துல அதிக மரணங்களை ஏற்படுத்துற இரண்டாவது பெரிய நோய். புற்று நோய் சிகிச்சையில நாம பெரிய  முன்னேற்றங்களை அடைஞ்சுருக்கோம். ஆனாலும், புற்றுநோயோட  தாக்குதலும் அதனால ஏற்படுற இறப்பும் அதைவிட அதிகமா இருக்கு.

அதனால தான், நம்ம ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும், அதிக திறன்வாய்ந்த அதே நேரம் குறைவான நச்சுத்தன்மை உள்ள புதிய நோய் சிகிச்சைகளை பத்தின ஆராய்ச்சிகளை, இன்னைய வரைக்கும் தொடர்ந்துகிட்டே இருக்காங்க.

அதனால, நம்ம பங்குக்கு நாம ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு, நம்மள நாமே பாத்துக்கணும். பொதுவா, பல காய்கறிகள், பழங்கள், கீரைகள் அப்புறம் கொட்டை வகைகளுக்கு புற்று நோயை எதிர்க்குற தன்மை இருக்கு தான்.

ஆனா, இந்தப் பதிவுல குறிப்பிடப்பட்டுள்ள 3 பொருட்கள் – பல உடல்பாகங்கள்’ல, வெவ்வேறு வகையில ஏற்படக்கூடிய பெரும்பான்மை வகை புற்று நோய்களை எதிர்த்து, அதை அழிச்சு, நம்மள குணப்படுத்தவும், அந்த புற்று நோய்கள் நமக்கு வராம தடுக்குற சக்தியோடவும் இருக்கும்.

அப்படிப்பட்ட நம்ம புற்று நோய் ஸ்பெஷல் லிஸ்ட்ல மூணாவது இடத்துல இருக்குறது, மஞ்சள்.

மஞ்சளின் மகத்துவம்

நம்ம தமிழர் வாழ்வியல்’ல முக்கிய இடத்துல இருக்க மஞ்சள்‘ல, Curcumin (கர்குமின்) அப்படிங்குற மஞ்சளகம் காணப்படுது. இந்த மூலக்கூறு, புற்று நோயோட வளர்ச்சியையும், பரவலையும் குறைக்கும். கர்குமின் – புற்று நோய் கட்டிகளை கொன்னு, அது பரவாம தடுக்குது’ன்னு ஆராய்ச்சிகள் சொல்லுது.

மார்பகம், மலக்குடல், வயிறு, அப்புறமா தோல்’ல ஏற்படும் புற்று நோய்களுக்கு எதிரா சிறப்பா செயல்படக் கூடிய மஞ்சள் – 200க்கும் மேற்பட்ட, பல்வேறு விதமான புற்று நோய்களை எதிர்க்க கூடியதுன்னு ஆராய்ச்சியாளர்களால நம்பப்படுது.

அதோட, மஞ்சள் – Chemotherapy’ன்னு சொல்லப்படுற வேதி நோய்நீக்க சிகிச்சை முறையில, கணையம் மற்றும் மலக்குடல்’ல இருக்க புற்றுநோய் கட்டிகளோட உணர்வுத்திறனை (Sensitivity) மேம்படுத்தி, சிகிச்சையோட பலனை அதிகரிக்கவும் உதவுது.

மஞ்சளின் மகத்துவம்

தினமும் வெறும் 4 கிராம் கர்குமினை எடுத்துக்குட்டாலே, கணையப் புற்று நோய் ஏற்படுற வாய்ப்பை 40% வரைக்கும் குறைக்க முடியும்.

 சரி, நம்ம லிஸ்ட்ல அடுத்து யாருன்னு பார்க்கலாம் வாங்க…

ப்ரோக்கோலி (Broccoli) எனும் பச்சை பூக்கோசின் முளைப்பயிர் 

ப்ரோக்கோலி’ன்னு சொல்லப்படுற பச்சை பூக்கோசு – நச்சு எதிர்ப்பு (Anti-Toxic), நுண்ணுயிரிகள் எதிர்ப்பு (Anti-Microbial), மற்றும் புற்று நோய் தடுப்பு (Anti-Cancerous) மாதிரியான பல நல்ல குணங்களை கொண்டது.

ஆனா, வெறும் 4 நாளே ஆன பச்சை பூக்கோசோட 

 முளைப்பயிர்’ல, ஒரு முழுசா வளர்ந்த பச்சை பூக்கோசுல இருக்குறத விட 24 மடங்கு அதிக சத்துக்கள் இருக்கும்.

இதுக்கு காரணம் என்னன்னா, அந்த 4 நாள் முடிவுல தான், ப்ரோக்கோலி விதைகள் அதோட பைட்டோ சத்துக்களை வெளியிடும்.

Broccoli

இதுல, தீவிரமா புற்றுநோயை எதிர்க்க கூடிய Sulforaphane (சல்போரபேன்) அப்படிங்குற வேதிப்பொருள் அதிகளவுல இருக்குறதால, புற்று நோய் வராம தடுக்குறதுலயும், புற்றுநோய் பாதித்த பகுதிகளை மறுபடி உருவாக்குவதுலயும் – இந்த பச்சை பூக்கோசு முளைப்பயிர்கள், ஈடு இணையே இல்லாம விளங்குதுன்னு தான் சொல்லணும்.

இந்த ப்ரோக்கோலி முளைப்பயிரை நம்ம வீட்டுலயே எப்படி செய்யுறதுன்னு பார்க்கலாமா…

ப்ரோக்கோலி முளைப்பயிரை வீட்டிலேயே செய்வது எப்படி…?
  • பச்சை பூக்கோசு விதைகளை வாங்கிட்டு வந்து, தண்ணீல ஓரு இரவு முழுக்க ஊறவைக்கனும்.
  • விடிஞ்சதும், விதைகளை வடிகட்டி, மறுபடியும் தண்ணிய மாத்தி ஊறவைக்கனும்.
  • இதுக்கு அப்புறம், அடுத்த நாள்’ல இருந்து, இந்த தண்ணிய  தினமும் 2 தடவை மாத்தனும்.
  • இந்த மாதிரி 4 நாள் தொடர்ந்து செஞ்சா, பச்சை பூக்கோசு முளைப்பயிரை, நம்ம வீட்டிலேயே தயார் செஞ்சிக்கலாம்.

அடுத்து, இந்த உலகத்துலயே புற்று நோய்க்கு எதிரா போராட கூடிய சிறந்த உணவு எது தெரியுமா…?

பூண்டு

எந்தவித பக்கவிளைவையும் ஏற்படுத்தாம, சாப்பிட்ட 30 நிமிஷங்கள்’லயே, குறிப்பிட்ட சில புற்று நோய் செல்களை கொன்னு குவிக்கிற வல்லமை, பூண்டுக்கு உண்டு. 

greatness of garlic

  • புற்றுநோயை உண்டாக்குற காரணிகளோட (Carcinogens) உற்பத்திய தடுத்து நிறுத்துறது,
  • DNA’வை பழுது பார்க்குற செயல்முறைய வேகப்படுத்துறது, 
  • அதோட, புற்றுநோய் உயிரணுக்களோட பெருக்கத்தை குறைக்கிறது’ன்னு

பல விதத்துல புற்று நோயை எதிர்க்குறதால, பூண்டை – புற்று நோய்க்கு எதிரான உணவுகளோட ராஜா அப்படின்னே சொல்லலாம்.

அதோட, பூண்டு நம்மளோட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இருதய நோய்களுக்கும், உடல் கொழுப்புக்கும் கூட சிறந்த உணவா இருக்கு. பூண்டு – இரத்த சர்க்கரையையும் பராமரிக்க உதவும்.

பூண்டுல இருக்க Allicin (அல்லிசின்) வகை மூலக்கூறுகள், புற்று நோய்க்கு எதிரா அதிதீவிரமா செயலாற்றும். இந்த அல்லிசின், புற்று நோய் செல்களோட வளர்ச்சியை நிறுத்தி, நோய்ப் பரவலை தடுக்கும். அதே நேரம், நம்ம DNA’வுல (இனங்கீற்று அமிலம்) ஏற்படுற புற்று நோய் பாதிப்பையும் கூட சரி செய்யும்.

தினமும், நம்ம உணவுல ஒரு பல் பூண்டை சேர்த்து வந்தாலே, வயிறு, மலக்குடல், கணையம், உணவுக்குழாய் (Oesophagus) மற்றும் மார்பக புற்று நோய்கள் ஏற்படக் கூடிய அபாயத்தை நிச்சயமா குறைக்கலாம்.

பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்ட காய்கறி – பழங்கள், கலப்படம் செய்யப்பட்ட உணவு பொருட்கள், மாசடைந்த சுற்றுச்சூழல், ஆரோக்கியமில்லாத வாழ்க்கை முறை – இப்படி நாம ஒவ்வொருத்தரும்,  ஏதோ ஒரு வகையில, புற்று நோயோட பிடியில சிக்கக் கூடிய அபாயத்துல தான் இருக்கோம்.

அதனால, இந்தப் பதிவுல குறிப்பிட்டுள்ள பொருட்களை உங்க உணவுல சேர்த்து, இயற்கை அன்னை தந்த, இந்த அற்புதமான மருந்துகளை சாப்பிடுவோம், புற்று நோய் இல்லாத வாழ்க்கைய நோக்கி நகர ஆரம்பிப்போம்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *